இந்திய சிறுவனின் ஜோதிட கணிப்பு!... கொரோனா மே 29 இல் முடிவுக்கு வரும்....
இந்திய சிறுவனின் ஜோதிட கணிப்பு!... கொரோனா மே 29 இல் முடிவுக்கு வரும்....

கடந்த நவம்பர் மாதம் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அந்த ராசியில் ஏற்கனவே சனியும் கேதுவும் இணைந்திருக்க கூடவே குரு தனது வீட்டிற்குள் சென்று சனி கேது உடன் இணைந்தார். அப்போது ஆரம்பித்தது ஆட்டம். நவம்பர் 30ஆம் தேதி தனுசு ராசியில் சந்திரன், சுக்கிரன் குரு, கேது, சனி ஆகிய ஐந்து கிரகங்கள் இணைந்தன. பின்னர் சுக்கிரன் ஒருவழியாக இடப்பெயர்ச்சி அடைந்தாலும் டிசம்பர் மாதத்தில் அதே தனுசு ராசியில் சூரியன், சனி, கேது, குரு, சந்திரன், புதன், ஆகிய ஆறு கிரகங்கள் இணைந்தன. இந்த காலகட்டத்தில்தான் சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. ஏற்கனவே தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை பற்றி பலமுறை எச்சரித்து நாம் பல பதிவுகளை போட்டிருக்கிறோம். அதே போலவே அபிக்யா ஆனந்தும் தனது ஜோதிட ஆய்வின் படி நவம்பரில் வைரஸ் பாதிப்பு உலகத்தை பீதியடைய வைக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.

இன்றைய தினம் திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் அதிசாரமாக மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இது சனியின் வீடு. குரு பகவான் நீசம் பெறும் வீடு. ஏற்கனவே இந்த வீட்டில் சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க, அதே நேரத்தில் செவ்வாயும் இணைந்துள்ளது . மகரம் ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைந்துள்ளது உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார் அபிக்யா ஆனந்த்.

மார்ச் 31ஆம் தேதி சந்திரன் மிதுனம் ராசியில் நுழைகிறார். மாலையில் திருவாதிரை நட்சத்திற்குள் நுழையும் சந்திரன் அங்கு ஏற்கனவே இருக்கும் ராகு உடன் சஞ்சரிக்கப்போகிறார். சந்திரன் வேகமாக நகரும் கிரகம். ராகுவும் வேகமாக நகரும் கிரகம். சந்திரன் தண்ணீர் கிரகம். ராகு காற்றைப் போல வேகமாக செல்பவர். அசுர முகமும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, அசுர உடலும் பாம்பு முகமும் கொண்டவர் கேது. சந்திரன் ராகு ஒரே ராசியில் சஞ்சரிக்க தனுசு ராசியில் இருந்து கேதுவின் பார்வையும் படுகிறது.

இந்த கிரகங்களின் சேர்க்கையால், ஆந்திரா, ஒரிஸா, நாட்டின் வடகிழக்கு பகுதிகள், வடமேற்கு பகுதிகளில் மிக அதிகமான பாதிப்பு இருக்கும் என்றும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மக்கள் துளசியை அடிக்கடி சாப்பிடுங்க. சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது நல்லது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் மஞ்சள், இஞ்சி, வேப்பிலை சேர்த்து ஆவி பிடிப்பது சளி தொந்தரவுகள் தாக்காமல் காக்கும் என்றும் கூறியுள்ளார் அபிக்யா ஆனந்த். இந்திய பொருளாதாரம் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் மே 29ஆம் தேதிவரை அதிகமாக இருக்கும் என்றும் அதன்பின்னர்தான் மருந்துகளுக்கு கட்டுப்படும் என்றும் கணித்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதளபாதாளத்திற்கு போன இந்தியாவின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான் மீண்டு எழும் என்றும் கணித்திருக்கிறார். மக்களே வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டிற்குள்ளே இருப்பதுதான் அனைவருக்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

Tags : Astrology Live Updates, Corona Astrology Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....