ஆன்லைன் கல்வி சேவைக்காக முகேஷ் அம்பானி ரூ. 500 கோடி முதலீடு......
ஆன்லைன் கல்வி சேவைக்காக முகேஷ் அம்பானி ரூ. 500 கோடி முதலீடு......

2012ஆம் ஆண்டு Aditi Awasthi என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த Embibe நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமாக இயங்கி வருகின்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்நிறுவனத்தில் ஏற்கனவே சுமார் 90 கோடி ரூபாயைப் பிப்ரவரி மாதத்தில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்கூட்டியே திட்டமிட்டபடி இந்நிறுவனத்தின் 73 சதவீத பங்குகளைக் கைப்பற்றிச் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. இதைத் தான் தற்போது செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இதனிடையில் Embibe நிறுவனம் பிப்ரவரி 2020இல் தனது சக போட்டி நிறுவனமான ஆன்லைன்தயாரி நிறுவனத்தையும் டிசம்பர் 2019இல் பன்டூட் நிறுவனத்தையும் கைப்பற்றித் தனது வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வலிமை சேர்த்தது.

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ஆன்லைன் கல்வியின் தேவை தற்போது மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இதன் எதிரொலியாகப் பள்ளிக் கல்வி பயிற்சி மற்றும் சேவை நிறுவனமாக Byju's நிறுவனத்தில் மார்ச் மாதம் மட்டும் சுமார் 60 லட்சம் மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புக் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பின் எதிரொலியாகச் சுமார் 19 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு குறைந்து தற்போது வெறும் 48 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார். இதன் காரணமாக ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது 8வது இடத்தில் இருந்து 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Tags : Industrial News, Mukesh Ambani News, Mukesh Ambani Investment, World news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

873 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

874 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

874 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

874 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

874 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

874 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....