கொரோனா பகிர் தகவல்: ஜப்பான் விஞ்ஞானிகள் கூறிய தகவலில், கொரோனா 1 லட்சம் நுண் துளிகள் மூலம் பரவல்....இதுதான் மூன்றாம்  நிலையாம்.....
கொரோனா பகிர் தகவல்: ஜப்பான் விஞ்ஞானிகள் கூறிய தகவலில், கொரோனா 1 லட்சம் நுண் துளிகள் மூலம் பரவல்....இதுதான் மூன்றாம் நிலையாம்.....

இந்நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகள் நுண் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதை கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம், பேசிக் கொண்டு இருக்கும் போதும், அருகே இருக்கும் போதும், தும்மல், இருமல் இல்லாமலேயே, நுண் துளிகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்கள் இடையே பரவக் கூடும். இது தும்மல், இருமல் மூலம் வெளியாகும் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை காட்டிலும் முற்றிலும் வித்தியாசம் ஆனது. மேலும், இந்த நுண் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் வேகமாகவும், அதிக தீவிரத்துடன் பரவி இருக்க வேண்டும் என நம்மால் எளிதாக உணர முடிகிறது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் தும்மல், இருமல் துளிகள் மூலம் பரவுவதை மருத்துவ முகக் கவசம் அல்லது N95 முகக் கவசம் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என சில நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நுண் துளிகள் மூலம் பரவினால் அதை தடுப்பது இன்னும் கடினமாகும்.இந்த நுண் துளிகள் பற்றி செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு வகுப்பறையில் ஒரு மனிதர் இருமினால் சில நொடிகளில் ஒரு லட்சம் நுண் துளிகள் வரை பரவும் என கண்டறியப்பட்டு உள்ளது. அந்த நுண் துளிகள் கொரோனா வைரஸை கடத்திக் கொண்டு சென்று தொற்று பலருக்கும் பரவ காரணமாக உள்ளது. இதே போலத் தானே நுண் துளிகள் அல்லாத, துளிகள் பரவும் போதும் நடக்கிறது?

அதில் தான் மிகப் பெரிய வித்தியாசமுள்ளது. தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் 20 - 30 வினாடிகளில் தரையை அடைந்து விடும். அதனால், காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் குறைவு. ஆனால், நுண் துளிகள் காற்றில் நீண்ட நேரம் இருக்கும். அதனால், அந்த இடத்தில் இருக்கும் பலருக்கும் அது பரவ வாய்ப்பும் அதிகம். இந்த புதிய ஆய்வுத் தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பது நல்ல செய்தி. அதே சமயம், இந்த மூன்றாவது வழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றால் உலக நாடுகள் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்கவும், அதிக நாட்கள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது

Tags : Corona Virus, Covid 19 Live Updates, World News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....