கொரோனவால் ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை..150 வெளிநாட்டவர்களை தனிமைப்படுத்திய தமிழக அரசு.....
கொரோனவால் ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை..150 வெளிநாட்டவர்களை தனிமைப்படுத்திய தமிழக அரசு.....

இந்நிலையில், டெல்லி மத கூட்டம் குறித்த கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் நடந்த எல்லா மத கூட்டங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் எல்லோரையும் குறித்து விசாரித்து வருகிறோம். ஈஷா யோகா நடத்திய சிவராத்திரி விழாவும் இதில் அடக்கம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி 21ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு மூலம் சிவராத்திரி விழா நடந்தது. இந்த விழாவில் 5000 ஆயிரம் வரை கலந்து கொண்டனர். இந்த விழாவில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இத்தாலி உள்ள நாடுகளில் இருந்தும் கூட இங்கு பலர் வந்துள்ளனர். பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இரவு முழுக்க சிவராத்திரி அன்று, இந்த விழா நடந்தது.

இந்நிலையில்,  இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. முக்கியமாக வெளிநாட்டு பயணிகள் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு எத்தனை வெளிநாட்டு பயணிகள் உள்ளனர், வெளி மாநில பயணிகள் எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் என்று சோதனை செய்யப்பட்டது. இது குறித்து ஈஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் விழாவில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை. கொரோனா பாதித்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கி ஏறியவர்களை கூட அனுமதிக்கவில்லை. முறையாக நாங்கள் விதிகளை கடைபிடித்து உள்ளோம்.

முறையாக சோதனை செய்துவிட்டுத்தான் நாங்கள் அவர்களை உள்ளே அனுமதித்தோம் என்று ஈஷா மைய அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களுக்கு என்ன மாதிரியான மருத்துவ சோதனை செய்யப்பட்டது. எங்கே சோதனை செய்யப்பட்டது, அதன் முடிவுகள் என்ன என்று எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. ஈஷா யோகா மையத்தின் செயல்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.நாங்கள் எல்லோரையும் சோதனை செய்துவிட்டோம், எந்த ஆபத்தும் இல்லை என்று ஈஷா யோகா மையம் கூறிய நிலையில் தற்போது 150 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் சிலர் இத்தாலியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஈஷா யோக மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  தமிழக அரசு இங்கு வந்த பயணிகளை, பிரபலங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Corona Virus, Covid - 19 Tamil Nadu News Live Updates, Tamil Nadu News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

563 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

564 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

564 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

564 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

564 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

564 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....