சீனா மீண்டும் குற்றச்சாட்டு, கொரோனாவை அமெரிக்க வீரர் தான் பரப்பினார்...மீண்டும் கிளம்பிய சர்ச்சை....
சீனா மீண்டும் குற்றச்சாட்டு, கொரோனாவை அமெரிக்க வீரர் தான் பரப்பினார்...மீண்டும் கிளம்பிய சர்ச்சை....

இதனை அடுத்து, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், இந்த வைரசை 'சீன வைரஸ்' எனக் குறிப்பிட்டார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.'கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் தானே தவிர, வைரஸ் உருவானது சீனாவில்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, சீன அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீன அரசின் ஆங்கில நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' இந்த வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானது எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

அந்தக் கட்டுரையை எழுதிய ஜார்ஜ் வெப், 'கொரோனா வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்., மாதம் ஹூபே மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வூஹான் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஒருவரால் பரப்பப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரசுக்கும் சைக்கிள் பந்தய வீரருக்கும் என்ன தொடர்பு என்பதையோ, பரப்பியதற்கான ஆதாரத்தையோ அந்தச் செய்தியில் விளக்கவில்லை. இதனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா தெரிவித்து வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது. இருந்தும், சீனாவில் இருந்து தான், இந்த வைரஸ் உருவானது என்பதற்கான ஆதாரத்தை இதுவரை அமெரிக்கா காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று கடந்த மாதங்களில், கொரோனா விவகாரத்தில், டிரம்பும் ஒரு சில அமெரிக்க அரசியல்வாதிகளும் சீனா மீது பழி சுமத்தும் வகையிலும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையிலும் பேசி வந்தனர். ஆனால், உண்மையை சீனா கண்டுபிடித்தவுடன், 'சீன வைரஸ் எனக் குறிப்பிட மாட்டேன்' என, மார்ச் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்' என, குளோபல் டைம்ஸ் நாளிதழ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Tags : Coronavirus,COVID19, World Corona Live Updates, World News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....