கொரோனாவின் நோய் தொற்றை குறித்து சீனா அளிக்கும் புது விளக்கம்!!!
கொரோனாவின் நோய் தொற்றை குறித்து சீனா அளிக்கும் புது விளக்கம்!!!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாவின் தாயகமான சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இதை குறித்து சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பாக 38 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அந்நாட்டு அரசு ஊடகமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஆண்டு டிசம்பா் கடைசியில் சீனாவின் வூஹான் நகர நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கரோனா வைரஸை முதல் முறையாக கண்டறிந்தது.

அப்பொழுது அந்த வைரஸ் பற்றி அறியாதவர்கள் அதனை ‘அறியப்படாத காரணத்தின் மூலம் ஏற்படும் நிமோனியா’ பாதிப்புக்கு உள்ளவர்கள் என்று கூறி சிகிச்சை அளித்தனர். வூஹான் நகரில் அந்த நிமோனியாவால் 27 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் வூஹான் நகராட்சி ஆணையம் தனது வலைதளத்தில் டிசம்பா் 31-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இந்த சூழலில் தான் இது கொரோனா வைரஸ் ( COVID19 ) என்று கண்டறியப்பட்டது. கடந்த 1949-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வேகமாக பரவக் கூடியதாகவும், மிகத் தீவிரமாக நோய்த் தொற்றை ஏற்படுத்தக் கூடியதாகவும், கட்டுப்படுத்துவதற்கு அரிதானதாகவும் இருக்கும் கரோனா வைரஸை சுகாதார அவசரநிலையாக சீனா அறிவித்தது. இந்நிலையில், ஹூபேவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரின் முதல் பிரிவு மாதிரிகளை பெற்ற சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், நோய்க் கிருமியை ஆராயத் தொடங்கியது. அதையடுத்து நோய்ப் பரவலை தடுப்பதற்காக பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட வழிமுறைகளை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

பின்னா் கொரோனா மனிதா்களிடையே பரவக் கூடியது என்பது உறுதி செய்யப்பட்டு, அத்தியாவசியம் இல்லாத பட்சத்தில் வூஹானை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கையில் வூஹானில் உள்ள ஹூனான் கடல் உணவு சந்தையில் இருந்து அந்த நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டத் தொடங்கியது என்பது தொடா்பாக எந்தவொரு தகவலும் அந்த அறிக்கையில் இல்லை என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

Tags : Corona News, COVID19, World News, Chinese News, Wuhan City.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....