கேரளாவில் சின்ன மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா... காசர்கோட்டில் நடந்த கதை!
கேரளாவில் சின்ன மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா... காசர்கோட்டில் நடந்த கதை!

மார்ச் 19ம் தேதி கோழிக்கோட்டில் துபாயில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் கேரளாவை சேர்ந்த பிரபல தங்க கடத்தல் ஆசாமி. கேரளாவில் இருக்கும் நகை கடைகள் சிலவற்றிக்கும் இவர் ரகசியமாக தங்கம் கடத்தி கொண்டு வருவதனை வழக்கமாக வைத்து உள்ளார் இவருக்கு பெரிய அளவில் அரசியல் பின்புலமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 11ம் தேதி கோழிக்கோடு வந்த இவருக்கு மார்ச் 19ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர். அந்த 8 நாட்கள் இவர் காசர்கோட்டில்தான் இருந்துள்ளார். இதுவரை எல்லாம் நன்றாக போய்கொண்டு இருந்தது. ஆனால் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின் நிலைமை மாறியது. அவருக்கு கொரோனா உறுதியான பின் அவர் யாரிடம் எல்லாம் தொடர்பு கொண்டார் என்று விசாரிக்கப்பட்டது. ஆனால் இவர் பல உண்மைகளை மறைத்துள்ளார்.தான் எத்தனை பேரை சந்தித்தேன். எத்தனை பேர் உடன் பேசினேன் என்பதை அப்படியே மறைத்து உள்ளார். இவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று கூறினால் பெரிய அளவில் கடத்தல் கும்பல்கள் மாட்டும். இவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகள் தெரிய வரும். அதேபோல், இவர் நகை கடைகள் உடன் வைத்து இருக்கும் தொடர்புகள் வெளியே வரும். பல முக்கிய புள்ளிகள் இதனால் மாட்டுவார்கள்.

இதனால் பல உண்மைகளை மறைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார். ஆகவே இவர் தொடர்ப்பு கொண்ட நபர்களை கேரளா அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இவர் மூலம் வேறு சிலருக்கு கொரோனா பரவியுள்ளது. அவர்கள் மூலம் இன்னும் சிலருக்கு சங்கிலி தொடர் போல கொரோனா பரவியுள்ளது. இவர் உண்மைகளை சொல்லாததால் கொரோனா பரவலை காசர்கோட்டில் தடுக்க முடியவில்லை.அதாவது இவரிடம் இருந்து யாருக்கு கொரோனா பரவியது என்பதை கண்டுபிடித்தால்தான் காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம், கொரோனா யாருக்கு எல்லாம் பரவி இருக்கலாம் என்று கணிக்க முடியும். ஆனால் இவர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருவதால் அங்கு கொரோனா உண்டாக வாய்ப்பு உள்ள நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால்தான் தற்போது கேரளாவில் காசர்கோட்டில் 107 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.

இவர் காசர்கோடு வந்து சுற்றிய ஒரு வாரத்தில் பலருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார். இதில் 27 பேர் அந்த கடத்தல் ஆசாமியை நேரில் சந்தித்த நபர்கள். இவர்கள் எல்லோரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் தற்போது காசர்கோடு மாவட்டத்தில் மொத்தமாக எல்லா கிராமங்களையும் மூடி உள்ளனர். மக்கள் வீட்டை விட்டு ஒரு நொடி கூட வெளியே வர கூடாது என்று கூறப்பட்டுள்ளது. காசர்கோட்டிற்கு அருகே உள்ள கண்ணூரிலும் 44 பேருக்கு கொரோனா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Coronavirus,COVID19,India Corona Live Updates, India News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....