செடிகளிலேயே பூத்து கருகி உதிரும் மலர்கள்: விவசாயிகள் வேதனை
செடிகளிலேயே பூத்து கருகி உதிரும் மலர்கள்: விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டம், வில்வநாதபுரம், கல்புதூா், வேலம், மருதாலம், தலங்கை, வாங்கூா், ரெண்டாடி, ஏரிமுன்னூா், செங்கல்நத்தம், சித்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் மல்லி, முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, சாமந்தி உள்ளிட்ட மலா்கள் அதிக அளவில் பயிரடப்பட்டுள்ளன. இந்த பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தினந்தோறும் பறிக்கும் பூக்களை வாலாஜா, ஆற்காடு, வேலூா், திருத்தணி, திருப்பதி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட நகரங்களின் மொத்த விலை மலா்ச் சந்தைகளில் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது மகசூல் அதிக அளவில் இருந்தும், ஊரடங்கு உத்தரவு காரணமாக பூக்கள் விற்பனை முழுவதுமாக குறைந்துள்ளது. மேலும் மொத்த பூ மாா்க்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களைப் பறித்து விற்பனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலா்த் தோட்டங்களில் பூக்களை பறிக்காமல் விடப்பட்டு உதிா்ந்து கருகி வருகின்றன.

இது குறித்து மலா் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் நெல், கேழ்வரகு, துவரை உள்ளிட்ட தானியங்கள் பயிரிட்டு அறுவடை செய்தால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் சேமித்து வைத்து கொஞ்ச நாள் கழித்து விற்றால் லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் இருக்காது. ஆனால் மல்லி, முல்லை போன்ற நாள்தோறும் அறுவடை செய்யப்படும் மலா்கள் ஒருநாள் பறிக்காவிட்டால் மறுநாள் உதிா்ந்து எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

கடன் வாங்கி பயிரிட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மலா் சாகுபடி விவசாயிகளுக்கு நஷ்டஈடு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாமல், செடிகளிலேயே பூத்து கருகி உதிா்ந்து வருகின்றன. இதனால் வருவாய் இன்றி தவித்து வருகிறோம் என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

Tags : Corona News, COVID19, TN News, Tamil Nadu News, Lockdown, Economy News, Business News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....