கொரோனவிற்காக இந்தியா தயாரித்த மருந்து: போட்டி போடும் சர்வதேச நாடுகள்!
கொரோனவிற்காக இந்தியா தயாரித்த மருந்து: போட்டி போடும் சர்வதேச நாடுகள்!

மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன். இது சிறிய அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிகிறது. இந்த மருந்தை தயாரிக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. மலேரியா மற்றும் கொரோனா நோய் தொற்று கிருமிகள் ஏறக்குறைய ஒரே அளவில் செயல்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மலேரியாவிற்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா வைரஸிற்கும் பயன்படுத்தி பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது இந்த மருந்தின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா திடீர் தடை விதித்துள்ளது. இதேபோல் பாராசிட்டமால் உள்ளிட்ட 26 வகையான மருந்துகளின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை முற்றிலும் எதிர்பார்க்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் கொரோனாவின் அசுர வேக தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்காவில் மொத்தம் 3 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிரான மருந்து இல்லாத நிலையே இதற்கு முற்றிலும் காரணம் ஆகும். எனவே இந்தியா பரிந்துரை செய்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அதிகளவில் ஆர்டர் செய்தது. இதேபோல் பிரேசில், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிடம் இருந்து மருந்து கேட்டனர். ஆனால் மத்திய அரசின் ஏற்றுமதி தடை உத்தரவு அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் முடிவை நாங்கள் விரும்பவில்லை. பிரதமர் மோடி இப்படியொரு முடிவை எடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மருந்தை அளித்தால் இந்தியாவின் செயலை பாராட்டுவோம், இல்லையென்றாலும் பரவாயில்லை. தக்க சமயத்தில் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சரியான தீர்வை அளிக்கும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதற்குள் உலக நாடுகள் மருந்திற்காக போட்டி போடத் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் எழும் அழுத்தம் காரணமாக தனது தடை உத்தரவை இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Corona News, COVID19, India News, World News, Medicine of Corona.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....