ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு ஸ்டாலின், கமல் தான் காரணமா? அட இது தெரியாமல் போச்சே..
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு ஸ்டாலின், கமல் தான் காரணமா? அட இது தெரியாமல் போச்சே..

ஊரடங்கு இன்றோடு முடிவடைய போகும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்று சில தினங்களுக்கு முன்பே அனைவரும் கேட்க தொடங்கிவிட்டனர். நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வியே அனைவரிடத்திலும் இருந்தது. வட இந்திய மாநிலங்களின் சில முதல்வர்கள் தாங்களாகவே ஊரடங்கை அறிவித்தனர். ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. தமிழக முதல்வர் பிரதமரின் கட்டளையை மட்டுமே நோக்கி கொண்டிருந்தார். அந்த நிலையில் தான் கடந்த 4 நாட்களாக ஊரடங்கு நீட்டிப்பினை முதல்வர் அறிவிப்பாரா? பிரதமர் சொல்வாரா? என்று டிவி முன்பு அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் எந்த முடிவும் அப்போதைக்கு எடுக்கப்படவில்லை.

இதனால் டென்சன் ஆன ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா இல்லையா என்பதை தாமதமின்றி அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதினார். பதில் வராததால் ஆத்திரம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிகளில் வென்டிலேட்டர்கள் பிரச்சனை முதல் செந்தில்பாலாஜி வரை அனைத்தையும் ட்வீட் போட்டு கேள்விகேட்க தொடங்கினார். இதனால் அதிமுக சற்று அதிர்ச்சி ஆனது. அதே சமயம் கமல் ஹாசனின் கருத்துக்களும் டெல்லியை மிரட்டின. பிரதமரை யாருமே எதிர்த்து கேள்வி கேட்காத நிலையில் கமல் மட்டும் ட்வீட் போட்டு கேள்வியாக கேட்டு கொண்டிருந்தார். பிரதமருக்கு எழுதிய ஓபன் லெட்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் கமல் ஹாசன் தமிழக முதல்வருக்கும் "லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிற மாநில முதல்வர்கள் அறிவித்துவிட்டனர்.. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் என் மாண்புமிகு முதல்வர் அவர்களே? உங்களது எஜமானரின் உத்தரவு குரலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? என்னுடைய குரல் மக்களிடம் இருந்து மக்களுக்காக வருகிறது" என்று கேட்டது இன்னும் ஆளுங்கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி தொடர்ந்து வந்த நெருக்கடியால் தான் முதல்வர், பிரதமர் சொல்வதற்கு முன்பே ஊரடங்கை அறிவித்து விட்டார் என்ற செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.

Tags : TN News, Tamil Nadu News, Corona News, COVID19, Lock Down, Politics.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....