தீவிரம் அடையும் கொரோனோ... வல்லரசு நாட்டுக்கே இந்த நிலையா? எச்சரித்த ராமதாஸ்..!!!
தீவிரம் அடையும் கொரோனோ... வல்லரசு நாட்டுக்கே இந்த நிலையா? எச்சரித்த ராமதாஸ்..!!!

கொரோனோ வைரஸ் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றின் கனவு நாடு அமெரிக்காவாகும். உலக நாடுகளில் எந்த நாடாவது வளர்ச்சியை லட்சியமாக்க முடிவு செய்துவிட்டால் அதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்காவாகும்.

ஆனால் தற்போது கொரோனா உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நாம் அமெரிக்காவாக இருக்கக் கூடாது என எண்ணுகின்றனர். அமெரிக்க அரசு நினைத்திருந்தால் கொரோனாவை முன் கூட்டியே தடுத்திருக்கலாம் மேலும் அந்த நாட்டின் பேராசையே தற்போது அழிவுக்கு வழி வகுத்துள்ளது என கூறியுள்ளார்.

பொதுவாக அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. அந்த நாடு மனித உயிரைவிட பணத்திற்கே முக்கியத்துவம் தரும். அமெரிக்காவில் மார்ச் மாதம் நிலைமை கட்டுக்குள் கிடந்தது. அந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டும் என ஏராளமானோர் தெரிவித்தனர். ஆனால் டிரம்ப் அதை மறுத்துவிட்டார். ஒரு சாதாரண காய்ச்சலுக்காக பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை. கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் இல்லை என்றார்.

20 நாட்கள் அலட்சியமாய் இருந்ததாலும் ஊரடங்கு பிறப்பித்தால் வர்த்தகம் பாதிக்கப்படும் என எண்ணியதால் அமெரிக்கா தற்போது மிகப் பெரிய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால் இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாத நிலை ஏற்படும். அதனால்தான் சொல்கிறேன். ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள். அடுத்த சில வாரங்களில் இந்தியா கொரோனாவை எதிர்கொள்ளும், நாடும் நலம் பெறும் என கூறினார்.

Tags : Coronavirus,Covid-19, India Live Updates, India News, Ramadas

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....