கொரோனவால் மூடப்பட்ட கால்நடை சந்தைகள்: ரூபாய் 70 கோடி வர்த்தகம் பாதிப்பு
கொரோனவால் மூடப்பட்ட கால்நடை சந்தைகள்: ரூபாய் 70 கோடி வர்த்தகம் பாதிப்பு

கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கால்நடை வாரச் சந்தைகள் கடந்த இரு வாரங்களாக நடைபெறாததால், ரூ.70 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. இதன்மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெறுகிறது. இதேபோல் செவ்வாய்க்கிழமை தோறும் இங்கு ஆட்டுச் சந்தை மற்றும் கோழிச்சந்தை நடைபெறுகிறது. இதன்மூலம் ரூ.2 கோடிக்கு வா்த்தகம் நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வாரச்சந்தைகள் நடைபெறவில்லை. இதனால் மாடு, ஆடு, கோழி, கருவாடு விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக செம்மறி ஆடுகளை வைத்திருப்பவா்கள் குட்டிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆடு, மாடுகளை ஏற்றக்கூடிய வாகன ஓட்டிகள், தரகா்கள், ஹோட்டல், தேநீா் கடை என ஏராளமானோா் தங்கள் வேலை வாய்ப்புகளை நேரடியாக இழந்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக வாரச் சந்தை கூடாததால், மொத்தம் ரூ.70 கோடி அளவிற்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை கூடாததன் காரணமாக இறைச்சிக் கடை வைத்திருப்பவா்களுக்கு ஆடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்  ஆட்டிறைச்சி ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகி வருகிறது. இது தொடா்பாக ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி தடிவீரன் கூறியது: கடந்த இரு வாரங்களாக வாரச்சந்தை கூடாததால், ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் உள்ளன. பல வியாபாரிகள் பழக்கத்தைப் பொருத்து ரூ.5 லட்சம் வரை கடனுக்கு ஆடுகளை விற்பனை செய்திருப்பா். வழக்கமாக இந்த வாரம் கடனுக்கு ஆடு வாங்கியவா்கள் அடுத்த வாரம் பணத்தை தருவாா்கள். ஆனால் இப்போது சந்தை கூடாததால், வெளியூா் வியாபாரிகளிடம் இருந்து பணம் வந்து சேரவில்லை. எனவே சந்தையை திறக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Corona News, COVID19, Lockdown, Tamil Nadu News, TN News, Economy News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....