கண்ணுக்கு தெரியாத வைரஸினால் கண் எதிரே கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்: கண்ணீரில் இத்தாலி
கண்ணுக்கு தெரியாத வைரஸினால் கண் எதிரே கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்: கண்ணீரில் இத்தாலி

ரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயினைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள் பலர் மன உளைச்சலில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும், 14 லட்சத்து, 47 ஆயிரத்து, 471 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், மூன்று லட்சத்து, ஒன்பதாயிரத்து, 145 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ் இது வரை  83 ஆயிரத்து, 401 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டு நாடு ஐரோப்பிய நாடுகளே ஆகும். ஐரோப்பிய நாடுகளில் மட்டும், ஏழு லட்சத்து, 50 ஆயிரத்து, 276 பேருக்கு தொற்று உள்ளது. குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தலா, ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.அதிக பலியில், 17 ஆயிரத்து, 127 பேருடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினில், 14 ஆயிரத்து, 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் பாதிப்பினால் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் இறந்த மக்களின் உடல்களே அதிகம் காணப்படுகின்றன. இதனால், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கடும் மன வேதனையில் இருக்கின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து, மன நல மருத்துவர்கள் மற்றும் சமூக தொண்டு நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இத்தாலியில் மட்டும், மருத்துவ துறையைச் சேர்ந்த, 13 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, 90 டாக்டர்கள், 29 நர்சுகள் இறந்துள்ளனர் என்ற செய்தி அனைவரின் கண்களிலும் கண்ணீரையே வரவைக்கிறது.

இது குறித்து, மன நல மருத்துவர்கள் கூறியுள்ளதாவது: பகல், இரவு பாராமல், டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக அளவில் நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்கள் கண்களுக்கு நேரே உயிர்கள் இறக்கும் போது மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்தே வாழ்கின்றனர். உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த சோர்விற்கு ஆளாகின்றனர். இந்த மன உளைச்சலால், சிலர் தற்கொலை செய்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. டாக்டர்கள் மற்றும் நர்சுகளை, ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை அளித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags : Corona News, Covid19, World News, Quietus News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....