வந்துவிட்டது குறைந்த விலையில் கொரோனவிற்கான ரீ -யூசபிள் மாஸ்க்: அண்ணாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
வந்துவிட்டது குறைந்த விலையில் கொரோனவிற்கான ரீ -யூசபிள் மாஸ்க்: அண்ணாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இதனால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டே செல்கின்றனர். ஆனால் இந்த மாஸ்க் மக்கும் தன்மை கொண்டது அல்ல. மேலும் இவை தொற்றுகளையும் உண்டாக்கும். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கொரோனாவுக்கான பங்களிப்பில் இறங்கியது. இவர்கள் முகக்கவசத்தின் தேவையை உணர்ந்து அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் சிறந்த முறையில் தரமான முகக்கவசத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் விலையும் மிக குறைவே.

தற்போது எல்லா இடங்களிலும் மாஸ்க் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. ஆனால் நீடித்த நாட்கள் நிலைத்திருப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு தரமான விலை மலிவான அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முகக்கவசம் 25அல்லது 30 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் இந்த முகக்கவசத்தை 20 முறை சுத்தம் செய்து பயன்படுத்தலாம். அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஜவுளி பேராசிரியர் எஸ். சுப்ரமணியம் முகக்கவசம் குறித்து கூறும் போது இந்த முகக்கவசம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தை விட பன்மடங்கு பாதுகாப்பாக செயல்படும். வடிகட்டும் துகள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த மாஸ்க்- ஆனது 0.3 மைக்ரோ மட்டத்தில் 30% வடிகட்டுதலையும், 2 மைக்ரான் மட்டத்தில் 80% காற்றை வடிகட்டும் அளவுக்கு திறனையும் கொண்டிருக்கும் சுவாசமும் எளிதாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த மாஸ்க் சிறப்பாக செயல் பட 300 வகையான துணிகளை சோதித்த பிறகு பாலியஸ்டர் துணியில் உருவாக்கியுள்ளனர். இந்த மாஸ்க் அணியும் போது அவை பாதுகாப்பும், சுவாசத்தையும் சீராக வைத்திருக்கும். பாலியஸ்டர் துணி மாஸ்க் அணியும் போது வியர்வையால் ஈரப்பதம் வந்தாலும் இவை எளிதில் ஆவியாகிவிடுவதால் கிருமிகள் பாதிப்பு இருக்காது.

இந்த முகக்கவசத்தை சோப்பை கொண்டு துவைத்து சூரிய ஒளியில் காய வைக்கலாம் என்றே இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முகக்கவசம் பற்றாக்குறையில் இருந்தாலும் தற்போது உற்பத்தி திறன் குறைவாக இருப்பதால் எங்களுடன் இணைந்து தயரிக்க வருபவர்களுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்கிறார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சரப்பா.

Tags : Corona News, COVID 19, Tamil Nadu News, TN News, Reusable Mask, Safety Precaution.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....