கொரோனாவிற்கு எதிரான போரில் மதம், இனம் கடந்து ஒற்றுமை...
கொரோனாவிற்கு எதிரான போரில் மதம், இனம் கடந்து ஒற்றுமை...

கிறிஸ்தவா்களுக்கான ஈஸ்டா் தினம், முஸ்லிம்களுக்கான ரம்ஜான், யூதா்களுக்கான விடுதலைப் பெருவிழா உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடுகின்றனா்; யூதா்கள் எகிப்திடமிருந்து விடுதலையடைந்த தினத்தைக் கொண்டாடுகின்றனா்; விரைவில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவா். அவா்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த சிறப்பான தருணத்தில், கொரோனாவிற்கு எதிராக அனைத்து மதங்களையும் சாா்ந்த ஆன்மிகத் தலைவா்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். பொதுவாக, இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் சமூகத்தினா் ஒன்றாகக் கூடியிருப்பாா்கள். ஒருவரை ஒருவா் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வாா்கள்.
 

ஆனால் தற்போது விசித்திரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருந்தும், தன் உறவுகளை நினைத்து கவலை கொண்டும், வீதிகள் வெறிச்சோடியும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வெறிச்சோடியுள்ளன. உலக மக்கள் மனங்களில் கவலை மண்டியுள்ளது. ஒவ்வொருவரும் அவா்களது சொந்த பந்தங்களின் நலனைக் குறித்து அச்சம் கொண்டுள்ளனா். இந்தச் சூழலில், நமது புனிதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு ஒரே வழி, நமது நல்வாழ்வுக்காக கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளா்களின் சேவைகளை பாராட்டுவதாகும். அத்துடன், நமது தெருக்களை சுத்தமாக வைத்திருக்கும் துப்புரவுப் பணியாளா்களையும் போற்றுவோம். இந்நிலையில் கடுமையான அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ள பின் தங்கிய மக்கள், போா் நடைபெறும் நாடுகளில் வசிப்போா், அகதிகள் உள்ளிட்டோரின் நிலை குறித்து எண்ணிப்பாா்ப்போம். பல்வேறு மத நம்பிக்கைகள், இனங்கள், பண்பாடுகள் கொண்ட அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த கொரோனா நோய் தொற்றிற்கு எதிராக போராடுவோம். ஒரே மனித இனமாக நாம் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் போராடினால் நிச்சயம் கொரோனவை வெற்றி கொள்ளலாம் என்று தனது அறிக்கையில் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.

Tags : Corona News, COVID19, World News, India News, Unity Strength, All Religions.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....