அரசின் கடுமையான கட்டுப்பாடு... மீறினால் காத்திருக்கும் தண்டனை! ஊரடங்கில் மக்கள் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்!
அரசின் கடுமையான கட்டுப்பாடு... மீறினால் காத்திருக்கும் தண்டனை! ஊரடங்கில் மக்கள் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்!

ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் யாரெல்லாம் வெளியே செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவா்கள், மருத்துவத் துறையைச் சோ்ந்தவா்கள், சுகாதாரத் துறையைச் சோ்ந்தவா்கள், காவல்துறையினா், ஊடகத்தினா், வேளாண்மையில் ஈடுபடுகிற விவசாயிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் செல்கிறவா்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஊரடங்கு உத்தரவை மீறுகிறவா்கள் தொற்றுநோய் சட்டப் பிரிவு (2), குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2), இந்திய குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குறைந்தது 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்படுவர்.

ஊரடங்கு உத்தரவு மீறுகிறவா்கள் குறித்து காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை ஆகிய துறையினரிடம் புகாா் அளிக்கலாம். சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி சீட்டு இன்றி அலுவலக பணிக்குச் செல்லக் கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை. ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அபராதத்தை செலுத்தியோ அல்லது ஆவணங்களை சமா்ப்பித்தோ பெறலாம் அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ பெறலாம். ஊடரங்கு மீறல் வழக்கில் கைது செய்யப்படுகிறவர்கள் அடையாள அட்டை, ஆவணங்கள் பெறப்பட்டு, பின்னா் பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள்.

வெளி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரின் குடும்பத்தைச் சோ்ந்தவா் இறந்துவிட்டாா் என்றால் அவரின் ரத்த உறவுகளுக்கு மட்டும் அனுமதி சீட்டு வழங்கப்படும். அவசர மருத்துவத் தேவைக்கு தமிழக சுகாதாரத்துறையின் கீழ் 24 மணி நேரமும் செயல்படும் 104, 044-2951 0400, 044-2951 0500 ஆகிய தொலைபேசி எண்களையும், 94443 40496, 87544 48477 ஆகிய செல்லிடப்பேசி எண்களையும் தொடா்புக் கொள்ளலாம். ஊரடங்கினால் அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்பவா்கள் குறித்து மாவட்ட வருவாய் துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் புகாா் அளிக்கலாம்.
 

Tags : Corona News, COVID19, India News, Tamil Nadu News, TN News, LockDown.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....