குடும்பத்தை பிரித்த ஊரடங்கு.. விரக்தியில் விபரீத முடிவு! சோகத்தில் உறவினர்கள்..
குடும்பத்தை பிரித்த ஊரடங்கு.. விரக்தியில் விபரீத முடிவு! சோகத்தில் உறவினர்கள்..

பீகாரை சேர்ந்த தொழிலாளி, சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, போடப்பட்ட ஊரடங்கால் தனது மனைவி மற்றும் தன் 3 மாத குழந்தையையும் பார்க்க  முடியாமல் போய்விட்டதே என்ற விரக்தியில் தூக்கு போட்டு கொண்டு இறந்து விட்டார். இதனால் அவர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில்: பீகார் மாநிலம் பர்னியா பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (25). இவருக்கு பபிதா குமாரியுடன் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. 8 ஆம் வகுப்பு வரை படித்த ராஜிவ் வேலைக்காக உறவினர் மூலம் சென்னை வந்தார். அவருடைய உறவினரான லட்டு சிட்கோ கம்பெனியில் பெயிண்ட் வேலை செய்ததால் அதே கம்பெனியில் அவருக்கு வேலை வாங்கி தந்துள்ளார். இருவரும் அங்கே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் கம்பெனியும் மூடப்பட்டது. வேலை இல்லாத நிலையில் வீட்டிற்குள்ளேயே இருந்த ராஜிவிற்கு தன் குடும்பத்தை பார்க்க தோன்றுவதாக லட்டுவிடம் கூறியுள்ளார். தற்போது எந்த ரயிலும் இயங்கப்படாததால் ஊரடங்கு முடியும் வரை பொறுத்து கொள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் 12.4.2020 காலை 6 மணியளவில் கழிவறையில் ராஜீவ், கேபிள் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனைக்குப்பிறகு ராஜீவ்வின் சடலம், சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றனர். இவரின் மறைவால் அவரின் உறவினர் சோக கடலில் உள்ளனர்.

Tags : Corona News, Covid19, TN News, Tamil Nadu News, Quietus News, Lock Down.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....