சீனாவின் பேச்சை கேட்கும் உலக சுகாதார மையம்... இது சரியில்லை... உச்சகட்ட எச்சரிக்கையில் டிரம்ப்!
சீனாவின் பேச்சை கேட்கும் உலக சுகாதார மையம்... இது சரியில்லை... உச்சகட்ட எச்சரிக்கையில் டிரம்ப்!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் 4,30,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14736 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ட்ரம்ப் உலக சுகாதார மையத்தை விமர்சித்து வருகிறார்.

நேற்று உலக சுகாதார மையத்தின் நிதியை நிறுத்த போவதாக கூறிய டிரம்ப் இன்றும் அந்த மையத்தை கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று அதிகாலையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், உலக சுகாதார மையம் வரிசையாக தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அது உலக நாடுகளை ஒரே மாதிரி பார்க்கவில்லை. சீனாவிற்கு அந்த அமைப்பு அதிக முக்கியத்துவம் தருகிறது. சீனா சொன்னதை அப்படியே உலக சுகாதார மையம் கேட்கிறது. அந்த அமைப்பிற்கு நாங்கள்தான் அதிகம் செலவு செய்வது. மேலும் அவர் பல மில்லியன் டாலர்களை வருடம் முழுவதும் நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கிறோம். கடந்த வருடம் மட்டும் 452 மில்லயன் டாலர் பணம் கொடுத்தோம். சீனா வெறும் 42 மில்லியன் டாலர்தான் கொடுத்தது. 452 மில்லயன் டாலர் நாங்கள் கொடுத்தும் கூட எல்லாம் சீனாவின் திட்டபடியே நடக்கிறது. சீனாவின் பேச்சைத்தான் உலக சுகாதார மையம் கேட்கிறது என்று சாடியுள்ளார்.

இப்படி உலக சுகாதார மையம் செய்வது அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும் சரியானதாக தெரியவில்லை எனவும், ஜனவரி 14ம் தேதி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்று கூறியது. சீனா வெளியிட்ட பொய்யான அறிக்கையை அப்படியே நம்பி உலக சுகாதாரம் மையம் இப்படி செய்தது என்றும், இதுபோல் பல தவுறுகளை செய்தது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாக நடத்த வேண்டும் ஆனால் உலக சுகாதார மையத்தின் செயல்பாடுகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை. அதனால் அவர்களின் பழைய செயல்களை எல்லாம் சோதனை செய்ய போகிறோம். அதன்பின் உலக சுகாதார மையம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க போகிறோம், என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Corona News, COVID19, World News, WHO, America President Donald Trump.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....