கொரோனாவின் அதிர்ச்சி தகவல்: அமேசான் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையும் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.....
கொரோனாவின் அதிர்ச்சி தகவல்: அமேசான் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையும் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.....

அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட தொடங்கியுள்ளது. அமேசான் காடுகளில் மொத்தம் 300க்கும் அதிகமான பழங்குடி மக்கள் குழுக்கள் உள்ளது. இதில் பல லட்சம் மக்கள் இருக்கின்றனர். இவர்கள் வெளியுலகுடன் தொடர்பில் இல்லை. வெகு சிலர் மட்டும் வெளியே சென்று பணிகளை செய்கிறார்கள். அப்படி பணி செய்யும் பெண் ஒருவருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.20 வயது நிரம்பிய கொக்காமா பழங்குடி குழுவை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வந்து உள்ளது. அமேசான் காட்டில், பிரேசில் தலைநகரில் இருந்து சுமார் 850 கிமீ தூரத்தில் இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இங்குள்ள பெண்ணுக்குத்தான் கொரோனா வந்து உள்ளது. பிரேசில் மருத்துவர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா வந்துள்ளது. பிரேசில் மருத்துவர் ஒருவர் இந்த மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் பிரேசில் சென்று மீண்டும் காட்டிற்கு திரும்பிய இவருக்கு கொரோனா வந்துள்ளது. அவரிடம் நர்ஸாக பணி புரியும் இந்த பழங்குடி பெண்ணுக்கும் கொரோனா பரவியுள்ளது. கொக்காமா என்பது அமேசானில் இருக்கும் பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளில் எல்லை வரை இவர்கள் விரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் இவர்கள் இனம் அழிந்து வரும் இனம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த பெண்ணின் குடும்பத்திற்கும் கொரோனா அறிகுறியுள்ளது. இதனால் அந்த இனத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரவினால் அங்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். அங்கு மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு ஆகும். அமேசான் காடுகளில் இருக்கும் பழங்குடி மக்களை அங்கிருந்து அனுப்ப, பிரேசில் அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அங்கிருக்கும் காடுகளை பயன்படுத்த அந்நாட்டு வலதுசாரி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் வரிசையாக அங்கு நிறைய திட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போது அந்த மக்களை மேலும் என் துன்புறுத்தும் விதமாக தற்போது கூடுதலாக அங்கு வைரஸ் தாக்குதல் வேறு வந்துள்ளது.

Tags : Coronavirus, Covid - 19 Live Updates, World News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....