கொரோனா பீதியில் தமிழ்நாடு! 2-ம் இடத்துக்கு முன்னேறியது ஏன்? அதிர்ச்சி தந்த 3 நாள் ரிப்போர்ட்!
கொரோனா பீதியில் தமிழ்நாடு! 2-ம் இடத்துக்கு முன்னேறியது ஏன்? அதிர்ச்சி தந்த 3 நாள் ரிப்போர்ட்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான். பயணிகள் பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது. தாய்லாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, நியூசிலாந்து, பிரான்ஸ், பிரிட்டன், துபாய், ஸ்பெயின், தாய்லாந்து, ஓமன், அபுதாபி,தோஹா, மேற்கு இந்திய தீவுகள் போன்ற நாடுகளில் இருந்து இருந்து நேரடியாகவும் மற்ற நகரங்கள் வழியாகவும் தமிழகம் வந்தவர்கள் மூலம் கொரோனா பரவியது. இதுதான் துவக்கம். அடுத்ததாக, மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். குறிப்பாக டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவரவர் ஊர் திரும்பியவர்களுக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் பெங்களூரு, திருவனந்தபுரத்தில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாகதான், நேரடியாக இருந்த நிலையில், தொற்று ஏற்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இதில் தாய்லாந்தில் இருந்து வந்தவர்களுடன் பயணித்து வந்தவருக்கு தொற்று ஏற்படவும், அந்த நபருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர், அவரது வீட்டில் இருந்த 3 பேருக்கும் கொரோனா பரவியது. இந்த சமயத்தில்தான் மதுரையில் கொரோனாவால் முதியவர் உயிரிழக்கவும், அவர் குடும்பத்தினருக்கும் வைரஸ் பரவியது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது நபருக்கு கொரோனா உறுதியானதே தவிர, எதன்மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் அதற்குள் அவரது அப்பார்ட்மென்ட்டில் 4 பேருக்கும் பரவியது. இதேபோல, சென்னையில் பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கும் எப்படி கொரோனாபரவியது என்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் பரவியது இந்தெந்த வழிகளில் என்றால், கடந்த 3 நாட்களில் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதும் தமிழக மக்களுக்கு தானாக கலக்கம் வந்து போகிறது. நேற்றுமுன்தினம் வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது... இதில் 74 பேர் டெல்லி தப்லித் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்து உள்ளது. தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 1,103 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்திற்கு வந்து உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 86,342 பேரும், அரசு கண்காணிப்பில் 90 பேரும் உள்ளனர். 28 நாள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு முடிவடைந்து 4,070 பேர் சென்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. இதில் லீடிங்கில் உள்ளது சென்னை, அடுத்தபடியாக உள்ளது ஈரோடு மாவட்டம்.

Tags : Coronavirus, Covid - 19 Live Updates, Tamil Nadu Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....