பாரிஸில் கொரோனா கொடூரத்தால் வீடுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ள குடும்ப வன்முறை!.....
பாரிஸில் கொரோனா கொடூரத்தால் வீடுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ள குடும்ப வன்முறை!.....

பிரான்சில் கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் அந்நாட்டில் குடும்ப வன்முறைகள் அதிகமாகிவிட்டன எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் கேஸ்டேனர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி , மார்ச் 17ஆம் தேதி லாக்டவுன் அமலுக்கு வந்த நாள் முதல் குடும்ப வன்முறை வழக்குகள் எண்ணிக்கை 30 சதவீதம் கூடியிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பாரிஸ் நகரில் மட்டும் 36 சதவீதம் வழக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இந்நிலையில், பிரான்ஸில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இப்போது ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாட்களில் குடும்ப வன்முறை குறித்து புகாரளிக்க பிரத்யேக தொடர்பு எண் அறிவிக்கப்படும் என அமைச்சர் கிறிஸ்டோப் உறுதி அளித்துள்ளார். ஏற்கெனவே பிரான்ஸில் 3919 என்ற எண்ணை அழைத்து குடும்ப வன்முறை பற்றி புகார் கூறும் வசதியுள்ளது.ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் குடும்ப வன்முறை அதிகமாகக் காணப்படும் நாடுகளில் ஒன்று பிரான்ஸ் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 18 முதல் 75 வயது வரையுள்ள சுமார் 2.19 லட்சம் பெண்கள், உடல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள். ஆனால் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி புகார் அளிக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு பெண் குடும்ப வன்முறையால் உயிரிழக்கிறார் என அந்நாட்டின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் கூறுகின்றது 

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட வீடியோவில் கொரோனா காலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியிறுத்தியிருக்கிறார். "பெண்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்." எனக் குறிப்பிட்ட அவர், "அனைத்து நாடுகளும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதை, தங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கியப் பகுதியாகக் கருத வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Paris News, France News, World News, family violence

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....