தமிழக முதலமைச்சர் அறிவிப்பு: 500 நடமாடும் காய்கறி, பழக்கடைகள்.......விவசாயிகளுக்கான சந்தைக் கட்டணம் ரத்து....
தமிழக முதலமைச்சர் அறிவிப்பு: 500 நடமாடும் காய்கறி, பழக்கடைகள்.......விவசாயிகளுக்கான சந்தைக் கட்டணம் ரத்து....

கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், அடுத்த 15 நாள்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதை கருத்தில் கொண்டும், விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத் தொகை வரும் 30-ஆம் தேதி வரை வசூலிக்கபடாது. இந்த கட்டணத் தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.

பொது மக்களுக்கு நியாயமான விலையில், தரமான காய்கறிகள் பழங்களை வழங்கிடவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, தோ்வு செய்யப்பட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கப்படும். கூட்டுப் பண்ணைய விவசாயிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை நகா்ப்புறங்களிலுள்ள நுகா்வோா்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கொண்டு சோ்க்கப்படும். 500 நடமாடும் விற்பனை வாகனங்களின் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும்.

நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை விவசாயிகள் விற்பனை செய்கின்றனா். இந்த விற்பனையின் போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். விளைபொருள்களை நியாயமான விலையில், மக்களுக்கு விநியோகம் செய்திட 1 சதவீதம் சந்தைக் கட்டணத்தை வரும் 30-ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். 

Tags : CM, Tn News, Tamilnadu news, CM Announcement News, Cancellation of fees, Farmers

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....