இருசக்கரவாகனம் திருட்டு: இன்ஸ்டாகிராம் மூலம் கண்டுபிடிப்பு..திருடியவரின் நண்பர் அடித்துக்கொலை...!!!
இருசக்கரவாகனம் திருட்டு: இன்ஸ்டாகிராம் மூலம் கண்டுபிடிப்பு..திருடியவரின் நண்பர் அடித்துக்கொலை...!!!

சென்னை கன்னிகாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் பைக் காணாமல் போனதால் அவர் இது குறித்து அவர் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்குப் பதிவு செய்த கே.கே நகர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ராமச்சந்திரன் தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் ஏரியா நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் பைக் காணாமல் போன விவரத்தையும், பைக் பற்றி விவரத்தையும் பதிவிட்டு நண்பர்களிடம் விவரத்தை கூறியுள்ளார்.

இதனிடையே, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற நபர் ராமச்சந்திரனின் திருடப்பட்ட வாகனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்து சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளார். இதனைப் பார்த்த ராமச்சந்திரனின் கல்லூரி நண்பர் வாட்ஸ்அப் குழுவில் இந்த புகைப்படத்தை அனுப்பி தகவலை பகிர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இரு தினங்களுக்கு முன்பாக காட்டுப்பாக்கம் சென்று தமிழ்ச்செல்வனை கேகே நகரில் உள்ள ராமச்சந்திரனின் வீட்டுக்கு அழைத்து வந்து அடித்து இருசக்கர வாகனம் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர்.

ஆனால் தனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார். மேலும் அந்த வாகனம் தனது நபர் ஆகாஷிடம் வாங்கி அந்த புகைப்படத்தை பதிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் ராமசந்திரன் அவருடைய நண்பருடன் ஆகாஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஆகாஷின் பெற்றோரிடம் வாகன திருட்டை கூறி வாகனத்தை பெற்று தருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

அதன்பின் ராமச்சந்திரனும் அவரது நண்பர்களும் ஆகாஷை கே.கே.நகரில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு அழைத்து வந்தும் கடுமையாக தாக்கியுள்ளனர்.  பின்னர் இரு சக்கர வாகனத்தை தான் திருடவில்லை எனவும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த இருசக்கர வாகனத்தை ஆகாஷின் நண்பரான காட்டுப்பாக்கத்தை சேர்ந்த விக்கி என்பவர்தான் திருடி உள்ளார் எனவும், விக்கி தான் திருடிய இருசக்கர வாகனத்தை ஆகாஷிடம் கொடுத்து வைத்து இருந்ததாக தெரியவந்துள்ளது. 

மேலும் ஆகாஷ் அந்த வாகனத்தை தனித்தனியாக பிரித்ததால் கோபமடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகாஷை மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மூச்சு பேச்சற்று மயங்கிய நிலையில் ஆகாஷ் விழுந்துள்ளார். இரவு 11 மணி வரை மயங்கிய நிலையிலேயே இருந்த ஆகாஷ் இறந்துவிட்டார் என ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களுக்கு தெரியவந்தது.

மேலும் அக்கம்பக்கத்தினர் இவர்கள் மீது சந்தேகப்பட்டு காவல் நிலையத்தில் தகவல் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆகாஷை சோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்தது. மற்றும் ராமசந்திரன் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Chennai, Bike Thift

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....