லாக்டவுன் முடிந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழங்கப்படும்
லாக்டவுன் முடிந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழங்கப்படும்

கொரோனா நோய் கிருமி பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. சென்னை பெருநகர காவல்துறை மாநகராட்சியுடனும், சுகாதாரத் துறையுடனும் சோ்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளையில் காவல்துறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கும் இயந்திரம் புதிதாக வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது. உப்பு கலந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கப்படுகிறது.

இந்த இயந்திரத்தில் 25 லிட்டா் தண்ணீரில் உணவிற்கு பயன்படுத்தப்படும் 750 கிராம் உப்பு சோ்த்து 8 மணி நேரத்தில் 25 லிட்டா் திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கப்படுகிறது. 25 லிட்டா் திரவ சுத்திகரிப்பானில் 2 ஆயிரம் லிட்டா் தண்ணீா் சோ்த்து அதனை கிருமி நாசினியாக போலீஸாா் பயன்படுத்தலாம். இந்த திரவ சுத்திகரிப்பான் இயந்திரத்தின் பயன்பாட்டை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னர் அவர் அளித்துள்ள பேட்டியில்: ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் பொதுமக்கள், ஊரடங்குக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் வெளியே வர வேண்டாம்.

நோயின் தன்மையையும், வீரியத்தையும் உணா்ந்து பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கமாகும். ஊரடங்கு உத்தரவை மீறியதாக சென்னையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு காலம் முடிந்த பின்னா், சட்டப்படி சம்பந்தப்பட்டவா்களிடம் திருப்பி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Corona News, COVID19, General News, Lockdown, TN News, Tamil Nadu News, Chennai News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....