கொரோன பரிதாபம்: தனது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள்.....
கொரோன பரிதாபம்: தனது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள்.....

அடுத்து என்ன நிகழும் என்ற கேள்வியுடன் செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள், சாரை சாரையாக சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். வெத்தலைப் பாக்கு கடை வைத்திருப்போர், பொட்டிக்கடை வைத்திருப்போரும் இதில் அடக்கம்.டெல்லியில் பில்டிங் பணியில் இரும்பு கம்பிகளை பொருத்தும் வேலையை செய்கிறார் தன்ராஜ். 35 வயது. பதேபூரில் இருக்கிறது தன்ராஜ் வீடு. வாடகை தரமுடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் இவரது ஹவுஸ் ஓனர்.. 570 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளார்.டெல்லியில் உணவு டெலிவரி வேலை பார்க்கும் 35 வயதான ரன்வீர்சிங் என்ற நபர் நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்றுதான் முயற்சித்தார். முடிந்தவரை நடந்தார். ஒரு கட்டத்தில் நடக்கும்போதே நெஞ்சடைத்துவிட்டது.. நடைபயணம் நரகத்திற்கே சென்றுவிட்டது.

உத்தர பிரதேசத்தை நோக்கி நடந்த சென்ற தொழிலாளர்களுக்கு சாலை பாதுகாப்பில் இருந்த அரசு ஊழியர்கள் சாப்பாடு தந்தனர். அதை வாங்கி சாப்பிடும்போது ஒரு தொழிலாளி கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். 3 நாளைக்கு அப்பறம் சாப்பாட்டை இப்பதான் கண்ணில் பார்க்கிறோம்.. இன்னும் 600 கி.மீ.தூரம் நாங்க போக வேண்டியிருக்கு என்று சொல்லி கொண்டே சாப்பிடும் இந்த வீடியோவும் வெளியாகி கலங்கடிக்கிறது.

நாட்டின் முதுகெலும்புகளான தொழிலாளர்களே இன்று வளைந்து ஒடிந்து நசுங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள். காதடைக்கும் பசியால் நெடுஞ்சாலைகளில் உழன்றுவரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு விதிகளோ, விதிமீறல்களோ எதுவுமே ஏறாது. இவர்களது நடைபயணங்களே இறுதிபயணங்களாகவும் முடிந்துவிடக்கூடாது என்பதே பெரும் கவலையாக உருவெடுத்து உள்ளது.இவர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தால்கூட அந்த விபரீதம் மொத்த நாட்டையும் திணறடித்துவிடும். ஊரடங்கு என்பது அவசியம்தான். ஆனால் அந்த உத்தரவுக்கு வயிறு அடங்குமோ?!! தொழிலாளர்களின் ஒட்டிய வயிற்றில் கிருமி ஒட்டியிருந்தால், அது இந்த பரவல் தடுப்பு உத்தியையே பாழாக்கிவிடுமே.. இந்த 21 நாட்கள் இழுத்து பூட்டப்பட்ட "பூட்டு" தொழிலாளர்களின் கதறலால் அதிர நொறுங்கி கொண்டிருக்கிறது.

Tags : Corona is awful Live Updates, Tamil News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....