ஊரடங்கால் சாராய விற்பனை அமோகம்... பவர் காட்டிய போலீஸ்
ஊரடங்கால் சாராய விற்பனை அமோகம்... பவர் காட்டிய போலீஸ்

ஊரடங்கால் அனைத்து டாஸ்மாக்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாநகர் மற்றும் மாவட்டங்களில் 125-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள மதுபார்களும் மூடப்பட்டு விட்டன. ஊரடங்கு எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருந்த மதுபான பிரியர்கள் ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் பொறுமை இழந்த பலர், சாராயம் வடித்தாவது குடிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இதுகுறித்து ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராம்ஜிநகர் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தார்கள். போலீசார் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். வீட்டை சோதனை செய்தபோது 3 பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் போடப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனிடையே திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வாழும் சிலர் தாங்களே தேவையான சாராயம் காய்ச்ச முடிவு செய்தார்கள். அதைத்தொடர்ந்து முகாம் வளாகத்தில் உள்ள வீடுகளுக்கு பின்புறம் சாராய ஊறல் போட்டனர்.

இதுகுறித்து அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அகதிகள் முகாமிற்கு சென்று விசாரித்தனர். சாராய ஊறல் போட்டதாக அகதிகள் முகாமை சேர்ந்த நியூட்டன் (வயது 48), அந்தோணி(46), சூசைப்பிள்ளை (58), ராபின்சன் (42) மற்றும் நடேசய்யர் (57) ஆகிய 5 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக யாரேனும் சாராயம் காய்ச்சுவதாக தெரிந்தால் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Tags : Tamil Nadu News, TN News, Tasmac News, General News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....