கர்நாடகாவில் படிப்படியாக ஊரடங்கு வாபஸ்..முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி..!
கர்நாடகாவில் படிப்படியாக ஊரடங்கு வாபஸ்..முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி..!

கர்நாடகாவில் முதல் மந்திரியான எடியூரப்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் ஏற்பட்டு வரும் சேதங்கள் அனைவருக்கும் தெரிந்ததே ஒன்றாகும் . மக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். கர்நாடகத்தில் குறிப்பாக பீதர், மைசூரு, மங்களூரு, பெங்களூரு, கலபுரகி ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. “பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, கர்நாடகத்தில் அனைத்து மக்களும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகழ் விளக்குகளை ஏற்றினார்கள். சாதி மதம், இனம் என்ற பாகுபாடு பாராமல் அனைவரும் விளக்குகளை ஏற்றினர். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14-ந் தேதி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் 14-ந் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற முடியும்.

அதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருப்பதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம் நமது கையில் உள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றும் சமூக பொறுப்பை நிர்வகிக்க சபதம் ஏற்பபோம்” என கூறியுள்ளார்.

Tags : Yeddyurappa News, India News, Karnataka News, Curfew withdrawn

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....