உங்களுக்கு இளநரை பிரச்னையா?.. அப்போ இத பயன்படுத்துங்க!...
உங்களுக்கு இளநரை பிரச்னையா?.. அப்போ இத பயன்படுத்துங்க!...

கரிசலாங்கண்ணி இரும்புச்சத்து உள்ள கீரை என்பதை நம் முன்னோர்கள் முன்பே உணர்ந்திருந்தார்கள். அதனால் இந்த கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள். இளநரை வந்தால் அவர்கள் செய்யும் கூந்தல் தைலம் கரிசலாங்கண்ணி தைலமாகத்தான் இருக்கும். கரிசலாங்கண்ணி இலையை மைய அரைத்து பாதி அளவு நீர் கலந்து கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனோடு மிளகு சேர்த்துக்கொள்ளலாம். அப்படி செய்தால் கண் ஆரோக்கியமும் மேம்படும்.

கரிசலாங்கண்ணி கீரையை அரைத்து சிறு சிறு வடைகளாக தட்டி வெயிலில் காய வைக்காமல் நிழலில் உலர்த்த வேண்டும். சற்று ஈரப்பதம் இருக்கும் போது சுத்தமான தேங்காயெண்ணெயை வாணலியில் காய்ச்சி அதில் இந்த வடைகளை போட்டு வெடிப்பு அடங்கியதும் இறக்கி இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து குளித்துவர வேண்டும். அப்படி செய்துவந்தால் இளநரை பிரச்சனை வராமல் தடுக்கலாம். 

எண்ணெய் காய்ச்சிய பிறகு பயன்படுத்தினால் கூந்தல் பலன் அளிக்காது, என்று நினைப்பவர்கள் கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி பொடித்து, மெல்லிய வெள்ளை துணியில் சிறிதளவு கட்டி விடுங்கள்.பிறகு வாணலியில் அந்த துணியை போட்டு, சுத்தமான தேங்காயெண்ணெய் மூழ்கும் அளவு விட்டு ஒரு நாள் முழுக்க ஊற வையுங்கள் . மறுநாள் பார்த்தால் அந்த எண்ணெய் கருப்பு நிறமாக மாறியிருக்கும். அதிக கசடு இருந்தால் வடிகட்டி பயன்படுத்தலாம். அல்லது அப்படியே தலைக்கு பயன்படுத்தி வரலாம். இதனால் இலேசான இளநரை கூட மறைந்துவிடும்.

கரிசலாங்கண்ணி வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று இரண்டு வகைகள் உண்டு என்றாலும் கூட மழைக்காலங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும். இவை அதிகமாக கிடைக்கும் போது இந்த கீரையை வாங்கி காம்புகளை நீக்கி மண் போக அலசி கொள்ள வேண்டும். பிறகு நீர் விடாமல் மிக்ஸியில் அரைத்தால் சாறு கிடைக்கும். கிடைக்கும் சாறுக்கு சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இரும்பு வாணலியில் காய்ச்சி வெடிப்பு அடங்கியதும் தலையில் தடவி வரவேண்டும். இந்த எண்ணெய் தடவும் போது வேறு எந்தவிதமான எண்ணெயும் பயன்படுத்த வேண்டாம். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரை பாதிப்பு இருக்காது.

அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை இந்த கரிசலாங்கண்ணி என்பதால் அதிக குளிர்ச்சி உள்ளவர்கள், சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இதனை பயன்படுத்தவேண்டாம். அப்படி பயன்படுத்துவதாக இருந்தால் எண்ணெயாக காய்ச்சி பயன்படுத்தலாம். அப்படியே பச்சையாக காய்ச்சி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.

Tags : Ilanarai News,tamil News,Lifestyle News,Hair Problem news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....