உங்களுக்கு கூந்தல் இயற்கையாக பளபளப்பாக இருக்க வேண்டுமா?.....இதை செய்யுங்க....
உங்களுக்கு கூந்தல் இயற்கையாக பளபளப்பாக இருக்க வேண்டுமா?.....இதை செய்யுங்க....

சீயக்காய் - 500 கிராம், எலுமிச்சை - 10 , வசம்பு- 4. சீயக்காயை வாங்கி வெயிலில் உலர்த்துங்கள். எலுமிச்சை இரண்டாக வெட்டி சாறு பிழியாமல் அப்படியே உலர்த்துங்கள். சாறுவடிவதை தடுக்க முடியாது ஆனால் வெயிலில் காயவைக்கும் போது சாறு தோலோடு சேர்ந்து காய தொடங்கும். வசம்பையும் சிறு துண்டுகளாக்கி மிஷினில் அரைத்து கொள்ளுங்கள். எலுமிச்சை காய்வதற்கு தான் சற்று அதிக நேரம் பிடிக்கும். பின்பு அனைத்தையும் சேர்த்து மிஷினில் கொடுத்து மைய அரைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். இவை ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது.  பூச்சிகள் பிடிக்காது. வசம்பு சேர்த்திருப்பதால் குணம் மாறாமல் அப்படியே இருக்கும். இந்த சீயக்காய் பொருள் எப்போதும் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.

நெல்லிக்காய்- 10 , வெந்தயம் - 100 கிராம், பூந்திக்கொட்டை - 100 கிராம், செம்பருத்தி பூ -10. நெல்லிக்காயை கொட்டை நீக்கி பொடியாக்கி நிழலில் உலர்த்திவிட்டு பின் பொடியாக்குங்கள். அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லிப்பொடியை வாங்கி பயன்படுத்துங்கள். இந்த பொடியை 2 மாதத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஒற்றை அடுக்கு செம்பருத்தி இருந்தால் ரொம்ப நல்லது. அவை கிடைக்காத பட்சத்தில் அடுக்கு செம்பருத்தியும் பயன்படுத்தலாம். பூவை அப்படியே காயவைத்து பொடித்து கொள்ளுங்கள். 50 பூவை போட்டு அரைத்தாலும் இவை 20 டீஸ்பூன் அளவு தான் இருக்கும். வெந்தயத்தையும் பூந்திகொட்டையும் சேர்த்து அரைத்து வையுங்கள். பூந்திக்கொட்டை சோப்புக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருள் என்றாலும் இதை அதிக நாள் வைத்து பயன்படுத்தகூடாது. அதனால் இதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரைத்து பயன்படுத்துங்கள். மேல் சொன்ன இந்த அனைத்து பொடிகளையும் அரைத்ததும் ஒன்றாக கலந்து பாட்டிலில் கொட்டி வைத்துகொள்ளுங்கள்.

சீயக்காய் பயன்படுத்தினால் கூந்தலில் அடரத்தியும் வளர்ச்சியும் கூடுதலாக பெறலாம். ஆனால் சீயக்காய் பயன்படுத்தும் போது அவை கூந்தலை வறட்சியடைய செய்யும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அதை தவிர்க்கவே கூடுதலாக இதர பொருள்களை சேர்க்கிறோம். நெல்லிக்காய் கூந்தலின் வறட்சியை தடுக்க கூடிய சத்துக்கொண்டது.  செம்பருத்தி பூ பொடியானது கூந்தலுக்கு மென்மையை தருவதோடு போஷாக்கையும் தருகிறது.

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தது. இவை கூந்தலுக்கு பொலிவு மற்றும் வளர்ச்சி தரக்கூடியது ஆகும். வெந்தயம் வழவழப்புதன்மை கொண்டது இந்த வழவழப்பை பட்டுபோன்ற பளபளப்பையும் கூந்தலிலும் பார்க்கலாம். பூந்திகொட்டை ஷாம்புவுக்கு மாற்றாக நுரைப்பு தன்மையையும் கூடவே வளர்ச்சியையும் கொடுக்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த பொருள்களே போதும் உங்கள் கூந்தல் அழகாய் அடர்த்தியாய் வளர்வதற்கு.பொடுகு, பேன் பிரச்சனை இருப்பவர்கள் சீயக்காய் பொடி பயன்படுத்து போது வேப்பிலை மற்றும் துளசி இலையை பொடித்து சேர்த்துகொண்டால் பேன், பொடுகு பிரச்சனை இருக்காது. சீயக்காய் - 2 டீஸ்பூன் என்றால் இதர மூலிகைபொடிகளை -1 டீஸ்பூன் அளவு கலந்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் போது கலந்துகொண்டால் போதுமானது. சாதம் வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து கரைத்து கொள்ளுங்கள். தலைக்கு ஆலிவ் அல்லது சுத்தமான தேங்காயெண்ணெய் சேர்த்து மசாஜ் செய்த பிறகுதான் இந்த சீயக்காயை பயன்படுத்த வேண்டும்.

Tags : Haircare tips, Hair, Naturally Hair tips

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....