பன்றிக்காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட கபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் அளிக்குமா?.....
பன்றிக்காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட கபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் அளிக்குமா?.....

நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர் அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அலோபதி மருத்துவ துறை மருந்துகளை கண்டறிவதில் வேகம் காட்டிவருகின்றது. இந்த நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தனர். அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

தற்சமயம் அரசு சித்தமருத்துவமனைகளில் மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார். மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது ஆகும். இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கின்றனர். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் டம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது. சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.

கபசுரக்குடிநீர் குடிப்பதால் கொரோனா வைரஸ் பரவாது. வந்தாலும் குணமாகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் சித்தமருத்துவர்கள் பரவிவரும் கொரோனா வைரஸ்க்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை. ஆனால் வைரஸ் போன்ற தொற்றுகளை பரவாமல் தடுக்க உதவும் கபசுர குடிநீர் கொரோனவுக்கான மருந்தாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள். இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே கூறலாம்.

Tags : Kapasurakudi water, Corona, coronavirus, covid19, Tamil news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....