ஊழியர்களுக்கான ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..!
ஊழியர்களுக்கான ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..!

இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கும் அமலில் உள்ளதால் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது தேவைப்படும். பொருளாதார தேவைக்காக, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்படுகின்றனர். இது மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், தற்போது நிலவும் சூழலில், 60 மில்லியன் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின் படி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் EPFO இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) தங்களது UAN எண்ணை பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்து கணக்கிற்குள் செல்ல வேண்டும்.

அங்கு ஆன்லைன் சர்வீசஸ் மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்த பின், ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், ஆனால் அதற்கு முன்னர் உங்களது பேங்க் செக் மற்றும் பாஸ்புக்கினை ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 

Tags : Central Government Action to Take PF Money Live Updates, PF Money Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....