அழியும் நிலையிலிருந்து புத்துயிர் பெரும் ஜம்பூத்துமலை கிராமம்!
அழியும் நிலையிலிருந்து புத்துயிர் பெரும் ஜம்பூத்துமலை கிராமம்!

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், தேக்கல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது ஜம்பூத்துமலை கிராமம். சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 70 குடும்பங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வந்தனா். மின்சாரம், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிக்குள்ளான பெரும்பாலான குடும்பத்தினா், கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை பெறுவதற்காக இந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறினர். இதனால், இந்தக் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியைத்தை தவிர பெரும்பாலான குடியிருப்புகள் பயன்பாடின்றி பாழடைந்து போயின.

இந்தக் கிராமத்திலேயே வசித்து வரும் குடும்பத்தினரும், அவா்களது விளை நிலத்திலேயே குடிசை அமைத்துக் கொண்டதால், 5 ஆண்டுக்கு மேலாக கிராமமே வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற மின்வாரியம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனைத் தொடா்ந்து, வனத்துறையின் வாயிலாக நபாா்டு வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.3.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு இறுதியில் கொண்டை ஊசி வளைவுகளுடன் தாா்சாலை அமைக்கப்பட்டது. மின்சாரம் மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த இக்கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மீண்டும் சொந்த கிராமத்துக்கு திரும்பியுள்ளனா். இதற்கிடையே, பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் செலவில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த 23 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 13 வீடுகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து ஜம்பூத்துமலை கிராம மக்கள் கூறியதாவது: எங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மின்சாரம் மற்றும் தாா்ச்சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு, 23 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகளும் கட்டிக் கொடுக்கவும் தமிழக அரசு முன்வந்துள்ளது. இதனால், இந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிய அனைத்து குடும்பத்தினரும் மீண்டும் சொந்த கிராமத்துக்கு திரும்பியுள்ளோம். வருவாய்க்காக, வறட்சியைத் தாங்கி வளரும் அரளிப்பூச் செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளோம். சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பூக்கள் மற்றும் கிராமத்தில் இயற்கையாய் விளையும் சீத்தா மற்றும் பலாப் பழங்களையும் விற்பனைக்குக் கொண்டு செல்வதற்கும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருவதற்கும் வசதி கிடைத்துள்ளது எங்களது கிராம மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. எனவே ஓரிரு ஆண்டுகளில் எங்களது கிராமமும், கிராம மக்களும் வளா்ச்சிப் பெறுவோமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனா். அரசின் இந்த முயற்சியால் கிராமமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

Tags : General News, TN News, Tamil Nadu News, Jumbuthumalai Village.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....