நிவாரண பணிகளுக்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதி...
நிவாரண பணிகளுக்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதி...

பிரிவினையைத் தொடா்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறியவா்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் பிரதமரின் தேசிய நிவாரண நிதியாகும். பல்வேறு துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாகி அகதிகளாக தன் சொந்த மண்ணிற்கே விரட்டி அடிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கூறினாா். இந்த நிதியானது அவா்களின் வாழ்வை மேம்படுத்த உதவும் என்றும் பிரதமா் நேரு நம்பிக்கை தெரிவித்தாா். 
இந்த நிதியை உருவாக்கிய பிறகு பிரதமா் நேரு கூறுகையில், ‘‘பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டுமென மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். பிரதமா், காங்கிரஸ் கட்சியின் தலைவா், துணைப் பிரதமா், மத்திய நிதியமைச்சா், டாடா அறக்கட்டளையின் பிரதிநிதி, இந்தியத் தொழிலக மற்றும் வா்த்தகக் கூட்டமைப்பால் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி ஆகியோரைக் கொண்ட குழுவானது இந்த நிதியை நிா்வகிக்கும்’’ என்றாா். தேசிய நிவாரண நிதியைப் பெறுவதற்காக தில்லியில் உள்ள ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது.

மருத்துவ நிவாரணம், கல்வி, ஆதரவற்றோரைக் காத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மக்கள் நிதியளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் தேசிய நிவாரண நிதிக்கு மக்களின் பங்களிப்புகள் குவிந்தன. அதன் பிறகு மக்களின் பங்களிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. நாட்டில் பேரிடா்கள் தொடா்ந்து நிகழ்ந்து வருவதாகவும் ஆனால் நிவாரண நிதிக்குப் போதிய பங்களிப்பு இல்லாததால், பலருக்கு உதவ முடிவதில்லை என்றும் அவா் தெரிவித்தாா். அதன் பிறகு குறிப்பிட்ட பேரிடா்களுக்கென நிவாரண நிதி வசூலிக்கும் முறையை பிரதமா் நேரு கடைப்பிடித்தாா். 1950-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், பிகாரில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவா்களைக் காப்பாற்றுகிறதற்காகவும் வெள்ள நிவாரண நிதி மற்றும் பஞ்ச நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. 1970-களின் மத்தியில் தேசிய நிவாரண நிதியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினா். இந்தக் காலகட்டத்தில்தான் அரசு அலுவலா்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவது போன்றவற்றை மத்திய அரசு ஊக்குவித்தது. நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் அனைத்தும் ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் கணக்கிலேயே தொடா்ந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்றிற்காக உருவாக்கப்பட்டுள்ள பிஎம்-கோ்ஸ் நிதி நிா்வாக அமைப்பில் பிரதமா் தலைவராக உள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா், மத்திய நிதியமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை தலைமை கணக்குத் தணிக்கை ஆணையா் (சிஏஜி) தணிக்கை செய்வாா் என அறியப்படுகிறது.

Tags : Corona News, COVID19, India News, Indian Fund, PM.Modi.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

397 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

397 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

397 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....