புது டீம் கலம் இறங்கள்: தமிழக அரசு அதிரடி.....மாஸ் காட்டும் முதல்வர் எடப்பாடி....
புது டீம் கலம் இறங்கள்: தமிழக அரசு அதிரடி.....மாஸ் காட்டும் முதல்வர் எடப்பாடி....

இது மக்களுக்கு ஓரளவு ஆதரவை தருகிறது. ஆனால் 2 வருஷத்துக்கு முன்பு பார்த்த முதல்வருக்கும், இப்போதைய முதல்வருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தென்படுகிறது. யோசித்து பேசுகிறார். கோபப்படும் நேரத்தில் கோப்படுகிறார். அரவணைக்கும் நேரத்தில் அரவணைக்கிறார். தடாலடி, அதிரடிகளை அவ்வப்போது காட்டி மிரட்டுகிறார். அடிப்படையியே இயல்பான, அமைதியான, எளிமையான குணநலன்களை எடப்பாடியார் பெற்றிருந்தாலும், பின்புலமாக சுனில் டீம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.யார் இந்த சுனில். சில வருடங்கள் வரை திமுகவின் A to Z சூத்ரவாதி. பிகே-வுடன் கைகோர்த்து வேலை பார்த்த அனுபவம் உடையவர். ஸ்டாலினுக்கு நெருக்கம். அரசியல் ஆலோசகர்.

 "நமக்கு நாமே" பயணத்தில் ஸ்டாலினின் கலர் கலர் டிரஸ். நடைபயணம், சைக்கிள் பயணம், டீ குடித்தது, வாக்கிங் போனது, நாத்து நட்டது.. இப்படி நெருங்கும் அதேசமயம் ரசிக்கும்படியான வியூகங்களை வகுத்து கொடுத்தது சுனில் தலைமையிலான டீம்தான். திமுக தலைமை குடும்பத்தில் அதிகார மிக்க நபராக வலம் வந்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் ஓஎம்ஜி நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்தபோதே, அதிமுக டீம் இவரை தன்பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாககூட செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது இப்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும் மறைமுகமாக இவரது உதவி இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா விவகாரத்தில் முதல்வரின் புரோகிராம், பிரஸ்மீட் கட்சி கூட்டம், எல்லாத்தையும் பிளான் செய்வது சுனில் டீம்தான் என்கின்றனர். இது நன்றாக ஒர்க் அவுட் ஆகியும் வருகிறதாம்.இந்த கொரோனா விவகாரத்தை முன்வைத்தே ஒருசில அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மேலெழுந்த நிலையிலும், அவர்களை ஆஃப் செய்து தன்னுடைய பங்கை முன் நிலை படுத்தி வருகிறார் முதல்வர்.

மக்களை பதட்டமில்லாமல் வைத்து உள்ளார். மக்களுக்கு மேலும் நம்பிக்கை தருவதற்காக அமைச்சர் ஆர்பி உதயகுமாரையும், வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணணையும் முதல்வர் எடப்பாடி களமிறக்கி விட்டிருக்கிறார். தொற்று அபாயம் என்று சொல்லப்படும் முக்கிய மாவட்டங்களில், இவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று சோதனைகளை நடத்தும் வேலைகளும் நடக்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

அதேபோல, "வணக்கம்.. உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன்'" என்று ஆடியோ ஒன்றும் தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. போனில் இந்த ஆடியோ ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. "கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. உங்கள் நலனை கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே இருங்கள். நன்றி, வணக்கம்" என்கிறார் முதல்வர். இது எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீரென நுழைந்து ஆய்வு செய்தார் முதல்வர். அப்படியே அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார். சாப்பிட்டு முடித்ததும், "இட்லி நல்லா இருக்கு. யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவங்க எல்லாருக்குமே சாப்பாடு கிடைக்குமாறு பார்த்துக்குங்க" என்று சொன்னார்.

Tags : CM Edappadi News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....