எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா?.. மு. க. ஸ்டாலின் சுற்றறிக்கை..
எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா?.. மு. க. ஸ்டாலின் சுற்றறிக்கை..

 மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-22) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்து, இப்போது 2019-20-ம் ஆண்டிற்கான நிதியையும் ரத்து செய்யும் சுற்றறிக்கையை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அனுப்பியிருக்கிறது.

உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை, கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததைப் பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீர்செய்யவோ, நெருக்கடி சூழ்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, இப்படி மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகளையும் பறித்து, மூன்று வருடத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது வேதனையானது மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலும் ஆகும்.

உச்சநீதிமன்றமே அங்கீகரித்துள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை இப்படி நிறுத்துவது, கொரோனா பணிகளில் மத்திய அரசுக்கே போதுமான ஆர்வம் இல்லையோ என்ற ஐயப்பாட்டினை எழுப்புவதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட, இந்த முடிவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மவுனமாக வேதனையுறும் நிலையில்  மக்களுக்குத் துரோகம் இழைத்திடும், சுற்றறிக்கையை மட்டுமின்றி, ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். என்று மு. க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

DMK leader Stalin condemns the Enforcement Ministry's cancellation of the 2019-20 batch development fund for MPs.

Tags : Tamilnadu news,TN news,M. K. Stalin news,MP news,Stalin MP news,Stalin twitter,தமிழ்நாடு செய்திகள்,திமுக தலைவர் ஸ்டாலின்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....