அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே  கோஷ்டி மோதல்.. தகராறில் இருவர் வெட்டிக் கொலை!..
அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல்.. தகராறில் இருவர் வெட்டிக் கொலை!..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர். இவருக்கும் அதிமுகவின் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களை கொண்டு மோதி கொண்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக திருவதிகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்குவதும், மேலும் அந்த பகுதியில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது எதிர் தரப்பினருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை பார்த்துக்கொண்டிருந்த எதிர் தரப்பினர், பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டனின் நண்பர் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காயமடைந்தார். கொலையானவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளார். முதற்கட்டமாக விசாரணை நடத்தியதில்  கோஷ்டி மோதலே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பாலு, கருணாகரன், ராமச்சந்திரன் உட்பட 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Cuddalore News,Tamilnadu News,aiadmk News,Death News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....