உண்ண தயங்கும் உணவுகளில் கொட்டி கிடக்கும் உடல் சத்துக்கள்... பார்க்கலாம் வாங்க...!!!!
உண்ண தயங்கும் உணவுகளில் கொட்டி கிடக்கும் உடல் சத்துக்கள்... பார்க்கலாம் வாங்க...!!!!

உடலில் ஆரோக்கியத்தை தரும் உணவுதான் அதிக கொழுப்புகளை தரும் என மக்கள் சில உணவை ஒதுக்கி விடுகின்றனர். அந்த வகையில் சில உணவுகளில் இருக்கும் நன்மையை பார்க்கலாம் வாங்க.  உடல் சத்தில் முதல் பங்கு வகிப்பது முட்டை முட்டையில் உள்ள மஞ்சள் கருவை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் எனவும், இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் முழு முட்டையை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் நீங்கி நல்ல கொழுப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்தபடியாக தேங்காய் எண்ணெய் இதில் அதிக கொழுப்புகள் உள்ளதால் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என பலரும் இதனை உணவில் சேர்ப்பதில்லை. ஆனால் தேங்காய் எண்ணெய் இதயத்திற்கு நல்லது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதனை சரியான அளவில் உணவில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளனர். 

மேலும் பால் வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவில் கொழுப்புகள் இருப்பது உண்மை தான். அதே சமயத்தில் எலும்புகள் மற்றும் இதயத்திற்கு நலம் தரும் K2 வைட்டமின் அதில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இதனை மிதமான அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள் புரதம், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகுந்தவை. இறைச்சி, மீன், பால் பொருட்கள் சாப்பிடாதவர்களுக்கு இந்த பருப்பு வகைகள் புரதசத்தை உடலில் அதிகரிப்பதற்கு உதவும். 
இது உங்கள் மனநிலையையும், செயல்திறனையும் மேம்படுத்த உதவும். மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்றும் அறியப்படுகிறது. மனச்சோர்வு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கும் காபி நன்மை பயக்கும் என்கின்றனர்.

அடுத்தபடியாக உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் உடலில் நீர் சமநிலையை பராமரிக்க உப்பு உதவுகிறது. உங்கள் தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உப்பு அவசியம். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2.3 கிராமுக்கு குறைவான சோடியத்தை உட்கொள்வது நல்லது என அறியப்பட்டுள்ளது.

முக்கியமாக சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் அது உடல்நலத்திற்கு நல்லது இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் டார்க் சாக்லெட் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது மற்றும் அதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்கள் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கும் டார்க் சாக்லெட் ஒரு சிறந்த உணவு என்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சே ஆதலால் அணைத்து உணவுகளையும் அளவோடு எடுத்துக்கொண்டால் நலமோடு வாழ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Healthy Food, Benefits, Tips

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....