உங்கள் வீட்டினை கொரோனா போன்ற நோய்கள் தாக்காமல், தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி?
உங்கள் வீட்டினை கொரோனா போன்ற நோய்கள் தாக்காமல், தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி?

வீட்டின் மேற்பரப்பில் கிருமிகள் இவ்வளவு காலம் தான் வாழும் என்று குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. ஆனால் எல்லா கிருமிகளும் சில மணி நேரம் முதல் சில நாட்கள் தங்க நேரிடும். மற்றும் மேற்பரப்பை பொறுத்து கிருமிகளின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. உங்கள் வீடு சுத்தமாக இல்லாத பட்சத்தில் அல்லது ஏதாவது ஒரு இடம் ஈரமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் கிருமி தாக்கம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஒருவர் தும்மும் போது அல்லது இருமும் போது அதுவும் அவர் முகமூடி எதுவும் அணிந்து இல்லாமல் இருந்தால் அவரைச் சுற்றயுள்ள இடம் முழுவதும் கிருமிகளால் தாக்கப்படுகிறது. கிருமி பாதிக்கப்பட்ட இந்த இடங்களை மற்றவர் தொடுவதால் எளிதில் அந்த நபரையும் கிருமி தாக்கும் அபாயம் உண்டாகலாம். ஆகவே, மனிதர்கள் அதிகமாக தொடும் ஒரு பொருள் கிருமி தாக்கத்திற்கு உள்ளாவது இயல்பானது. லேண்ட்லைன், தொலைக்காட்சி ரிமோட், சமையலறை திண்ணை, டேபிள்டாப் போன்றவை வீட்டில் கிருமிகள் அதிகம் வசிக்கும் இடங்களாகும்.

எந்த ஒரு சூழலிலும் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் மற்றும் டிடர்ஜென்ட் போன்றவை கிருமிகளை அழிக்க வல்லது ஆகும். வீட்டின் மேற்பரப்புகள் குறிப்பாக தரை, சமையலறை அலமாரிகள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் கிருமிநாசினி ஓரளவிற்கு வீட்டை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும். ஆல்கஹால் அடிப்படை கொண்ட கிருமிநாசினி நல்ல பலனை தரும். ஆனால் அவற்றைக் கொண்டு சுத்தம் செய்து முடித்தவுடன் உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பதை மறக்காதீர்கள். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் போது உங்கள் கைகளால் கண்கள், வாய் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளை தொட வேண்டாம். பேப்பர் டவல், துணி, வைப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் .

வீட்டை சுத்தம் செய்யும் போது எப்படி சுத்தம் செய்கிறீர்கள் என்பது முக்கியம். ஒரே திசையில் சுத்தம் செய்ய வேண்டாம். மேற்பரப்பில் சுத்தம் செய்யும் போது ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் S வடிவத்தில் சுத்தம் செய்யவும். மாப் பயன்படுத்தி சுத்தம் செய்து மறுமுறை துணி கொண்டு சுத்தம் செய்தால் அந்த துணியை நன்கு அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். அல்லது வாஷிங் மெஷினில் வழக்கமான டிடர்ஜென்ட் கொண்டு அந்த துணியை அலசுவதால் கிருமிகள் கொல்லப்படும் வாய்ப்பு உண்டு. இந்த துணிகளை துவைக்கும் போது சூடான நீர் பயன்படுத்துவது நலல்து.

கிருமிகளை அழிக்க பயன்படுத்தும் துணிகளை வெந்நீர் பயன்படுத்தி அலசுங்கள். அலசியபின் அந்த துணிகளை வெயிலில் உலர்த்துங்கள். உங்கள் வீட்டில் ஒரு நபர் நோய்வாய்பட்டிருந்தால் அவருடைய துணிகளை தனியாக துவைத்து போடுங்கள். சுத்தம் செய்ய பயன்படுத்தும் டவல், ஷீட் போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதனை மற்ற இடங்களில் வைப்பதால் கிருமிகள் ஒருவேளை அந்த இடத்தில் பரவ நேரலாம் என்பதால் வேறு இடங்களில் எங்கும் வைக்காமல் உடனடியாக வெயிலில் உலர்த்துங்கள். அதனால் கிருமிகள் பரவுவது குறைகிறது. வீட்டை சுத்தம் செய்து முடித்தவுடன் உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி நன்றாக கழுவ மறக்க வேண்டாம்.

Tags : Health and Clean Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....