வெயிலுக்கு கண்ணுல கட்டி... விரட்டி அடிக்க இந்த மூன்று வழி...
வெயிலுக்கு கண்ணுல கட்டி... விரட்டி அடிக்க இந்த மூன்று வழி...

கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணம் கண்களுக்கான வேலை அதிகரித்து வருவதே ஆகும். குறிப்பாக கணினித்துறையில் இருப்பவர்கள் அதிக அளவு கண் சம்பந்தமான குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். அவர்களோடு அதிக நேரம் டிவி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கண்களில் கட்டி ஏற்பட்டால் உடனே கண்களை கசக்கவோ, கட்டியை உடைத்து அதன் சீழை வெளியேற்றவோ முயற்சிக்ககூடாது. அப்படி செய்தால் சில பக்க விளைவுகள் ஏற்படும். கண் இமைகளில் இருக்கும் சுரப்பிகளில் அடைப்பு அல்லது கிருமித்தொற்று இருந்தால் அங்கு கட்டி உண்டாக கூடும். இமைகள் வீக்கமும், இமை ஓரங்கள் தடித்து இருப்பதும் கட்டி வருவதற்கான அறிகுறி தான். தொற்று பொறுத்துதான் கட்டிகள் குணமடையும் வேகமும் உள்ளது என்பதால் முதலில் தொற்றை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

கண் கட்டிற்கு என்றே நம் முன்னோர்கள் மூன்று சித்த வைத்தியத்தை கண்டுபிடித்து செயல்படுத்தியும் உள்ளனர். முதலாவது மண் பானையில் சாதத்தை வடித்த கையோடு உடனடியாக எடுத்து மெல்லிய துணியில் போட்டு கட்டி வந்த இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுத்தால் வலி உபாதை நிச்சயம் குறையும். தினமும் சாதம் வடித்த உடன் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் நான்கைந்து நாளில் பலன் நிச்சயம் கிடைக்கும். 

இரண்டாவது கல் உப்பு 2 டீஸ்பூன் அளவு எடுத்து இரும்பு வாணலியில் சேர்த்து சூடு பறக்க வறுத்து சற்று கனமான துணியில் போட்டு மூட்டையாக கட்டி கொள்ளவும். இதை கண்களுக்கு ஒத்தடம் கொடுத்துவந்தால் கண் கட்டி வீரியம் குறையும். கட்டிகள் குணமாக பெருங்காயத்தை அம்மிக்குழவியில் சிறிது நீர் விட்டு பெருங்காயம் உரைத்து அதில் சிட்டிகை மஞ்சள்தூளை சேர்க்கவும். பிறகு கெமிக்கல் அதிகமாக இல்லாத சோப்பையும் இரண்டு முறை உரைக்கவும். இவை குழைந்து சிவப்பு மஞ்சள் நிறத்தில் வரும். அதை கண் ஓரங்களில் கட்டிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். தினமும் நான்கு அல்லது 5 முறை வைக்கலாம். மற்றும் குளிர்ச்சி மிகுந்த நாமக்கட்டி மற்றும் சந்தனம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

கோடைகாலத்தில் குளிர்ந்த நீரை பருகுதல் தலைக்கு நன்றாக எண்ணெய் வைப்பது போன்றவற்றை செய்தாலே கண்களில் கட்டி வர வாய்ப்புகள் இல்லை.

Tags : Health News, Fitness News, General News, Beauty News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....