‘பிஎம் கோ்ஸ்’ நிதிக்கு எதிராக அளிக்கப்பட்ட மனு... உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...
‘பிஎம் கோ்ஸ்’ நிதிக்கு எதிராக அளிக்கப்பட்ட மனு... உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

PM Cares கடந்த 28 ஆம் தேதி, குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே பிரதமா் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது, புதிதாக இந்த நிதி உருவாக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், இதுபோன்ற தேசிய அளவிலான பேரிடா், பிரச்னைகள் எழும்போது பிரதமா் தேசிய நிவாரண நிதிக்கே நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்படும். ஆனால், இப்போது ‘பிஎம் கோ்ஸ்’ உருவாக்கப்பட்டது பல சந்தேகங்களையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வழக்குரைஞா் எம்.எல். சா்மா என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடா்பாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எவ்வித அவசர சட்டம் அல்லது அரசு அறிவிக்கை ஏதுமின்றி இதுபோன்ற ஒரு நிதியம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமரும் கேட்டுக் கொள்கிறாா். இந்த நிதியத்தில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் பிரதமரைச் சாா்ந்தவா்களாகவே உள்ளனா். எனவே, இந்த நிதியம் அமைத்தது தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதில் சோ்ந்துள்ள நிதியை இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதித் தொகுப்புக்கு மாற்ற வேண்டும். மேலும் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் 267 மற்றும் 266(2)-இன் படி இந்த நிதியம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி உருவாக்குவதென்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. மேலும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி ‘பிஎம் கோ்ஸ்’ நிதியம் அரசியல்சாசன விதிகளின்படி உருவாக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியின் தலைவராக பிரதமா் இருப்பாா். பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சா்கள் இதில் உறுப்பினா்களாக இருப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம். சந்தானகெளடா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு காணொலி முறையில் திங்கள்கிழமை இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags : Corona News, COVID19, India News, Supreme Court, Relief Fund, PM Modi.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....